அவதூறு வழக்கு: கங்கனா ரனாவத் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

0
116

Kangana Ranaut: நடிகை கங்கனா ரனாவத் மீது பாலிவுட் பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கங்கனா ரணாவத் பேசியதாக ஜாவேத் அக்தர் தெரிவித்திருந்தார்.

இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். அந்த அறிக்கையில் கங்கனா ரனாவத் அவதூறு கருத்துகளை பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தன் மீதான அவதூறு வழக்குக்கு தடை கோரி மும்பை நீதிமன்றத்தில் கங்கனா ரனாவத் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை நீதிமன்றம் கங்கனா ரனாவத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இது குறித்து நீதிபதி நாயக் அளித்த தீர்ப்பில், “ஜாவேத் அக்தர் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணை ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஆனால் கங்கனா ரனாவத்தின் மனு தாமதமாகத்தான் நீதிமன்றத்திற்கு வந்தது.

எனவே இந்த புதிய மனுவின் மீதான நடவடிக்கை நீதிமன்ற விசாரணையை தாமதப்படுத்தும் என்பதால், இந்த மனுவை நிராகரிக்கிறேன்” என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Unlimited-க்கு 1000 ரூபாய்கு கொடுத்தால் போதும்..! சன்னி லியோன் அறிவித்த ஆஃபர்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here