Kangana Ranaut: மத்திய அரசு சிஏஏ-வை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை நேற்று வெளியிட்டது. மேலும், இந்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாகவும் அறிவித்தது.
அதில், பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறியவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க இந்த சட்ட மசோதா வழிவகை செய்வதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக பல்வேறு கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய அரசின் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாவில் ஸ்டோரியில் வெளியிட்ட பதிவில், “கருத்து சொல்வதற்கு முன்பு சிஏஏ குறித்து தெரிந்து கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். அதோடு, பிரதமர் மோடி சிஏஏ குறித்து பேசும் வீடியோ ஒன்றையும் அத்துடன் இணைத்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.