Kangana Ranaut: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 5ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதன்படி, ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான சுப்ரியா ஸ்ரீனேட், தனது இன்ஸ்டாவில் நடிகை கங்கனா ரனாவத்தின் கவர்ச்சியான புகைப்படத்துடன் சர்ச்சைக்குறிய வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட்டை பலரும் கண்டித்து வருகின்றனர். இதனையறிந்த கங்கனா ரனாவத், சுப்ரியா ஸ்ரீனேட்டினுக்கு பதிலளிக்கு விதமாக தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கடந்த 20 ஆண்டுகளாக நான் ஒரு நடிகையாக அனைத்து விதமான பெண்களின் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். குயின் படத்தில் ஒரு அப்பாவி பெண்ணாக, தாக்கட் படத்தில் உளவாளியாக, மணிகர்ணிகாவில் ஒரு தெய்வப் பெண்ணாக, சந்திரமுகியில் ஒரு பேயாக என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன்.
மேலும், ராஜ்ஜோவில் விபச்சாரியாக, தலைவி படத்தில் ஒரு புரட்சிகரமான பெண்ணாக நடித்துள்ளேன். உடல் உருப்புகள் குறித்த விழிப்புணர்வு மக்களுத் தேவைப்படுகிறது.
பாலியல் தொழிலாளிகளை மோசமாக விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்து பெண்களுக்குமே ஒரு கண்ணியம் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், தனது ‘X’ தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தனது சமூக வலைததளப் பக்கங்கள் பல்வேறு நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அவர்களுல் யாரோ, இந்த மோசமான பதிவை வெளியிட்டிருக்கிறார். இந்த சம்வவம் குறித்து எனது பார்வைக்கு வந்த உடனே அந்த பதிவை நான் நீக்கிவிட்டேன். ஒருவரை அந்தரங்கமான முறையில் விமர்சிக்கும் பழக்கம் கிடையாது” என குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் இருவரது இந்த பதிவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகை கங்கனா ரனாவத் குறித்து பல சர்ச்சைகள் கிளம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.