மிரட்டல் கெட்டப்பில் சூர்யா.. கங்குவா படத்தின் டீசரால் ரசிகர்கள் உற்சாகம்..!

0
111

Kanguva Teaser: இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, கோவை சரளா, ஆனந்த் ராஜ், யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

சரித்திர படமாக உருவாகும் கங்குவா, 10 மொழிகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

அதனைத் தொடர்ந்து, ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், இந்த டீசர் யூடியூப்பில் 20M பார்வையாளர்கள் இந்த டீசரை பார்த்துள்ளனர். ஹாலிவுட்டை மிஞ்சும் வகையில் உருவாக்கப்பட்டு இந்த டீசர் உலக அளவில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், தற்போது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், இரண்டு சூர்யாக்கள் இருக்கின்றனர்.

அதில், ஒரு சூர்யா மாஸ் லுக்கில் கையில் துப்பாக்கியுடனும், மற்றொரு சூர்யா கையில் கத்தியுடனும் இருக்கின்றனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here