Kanguva: இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, கோவை சரளா, ஆனந்த் ராஜ், யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
சரித்திர படமாக உருவாகும் கங்குவா, 10 மொழிகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது ‘கங்குவா’ படத்தில் டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே நடிகர் சூர்யா படத்தை பார்த்ததாகவும், பின்னர் படம் அருமையாக வந்திருப்பதாக பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், படத்திலுள்ள VFX மட்டும் சரிவர ஒத்துப்போகவில்லை என சூர்யா கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து, VFX செய்ய வேண்டிய காட்சிகளை மீண்டும் எடிட் செய்யக்கோரி சூர்யா கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, VFX காட்சிகள் மீண்டும் எடிட் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், ‘கங்குவா’ ரிலீஸில் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த படம் ரிலீஸுக்கான தேதியை தேர்வு செய்து வைத்திருந்ததாகவும், இந்த VFX காரணமாக ரிலீஸில் மாற்றம் ஏற்ப்பட வாய்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.