‘Conjuring Kannappan’ வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

0
137

‘Conjuring Kannappan’: அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்து டிசம்பர் 8ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இந்த திரைப்படத்தில் சதீஷ் உடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், ரெஜினா, நாசர், ஆனந்த்ராஜ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் இந்த திரைபடத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டைமெண்ட் தயாரித்துள்ளது, இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

கேம் டிசைனரான சதீஷ், சூனியம் வைக்கப்பட்ட ஒரு ரெக்கையை தொட்டதால் பேய் பங்களாவிற்குள் மாட்டிக்கொள்கிறார். அந்த கனவில் உயிர் பிரிந்தால் நிஜ உலகிலும் உயிர் பிரிந்து விடும் என்ற நிலை ஏற்படுகிறது.

ஹீரோ மட்டுமன்றி, அவரது குடும்பமே அந்த கனவிற்குள் சிக்கிக்கொள்கின்றனர். பேயின் பிடியில் இருந்து அவர்கள் தப்பினார்களா? என்பது தான் கதை. இதனை காமெடியுடன் சேர்த்து கூறியுள்ளனர்.

‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டான நிலையில் ஹீரோ சதீஸ், இயக்குநர் செல்வின் ராஜ் சேவியருக்கு Emporio Armani வாட்சை பரிசாக வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு அனைவரும் ஒன்று திரண்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது குறித்து புகைப்படங்களை படக்குழு ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: வெளியானது ‘லவ்வர்’ படத்தின் செகண்ட் சிங்கிள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here