அருண் விஜய்யுடன் மல்லுக்கு நிக்கும் கன்னட நடிகர்..!

0
112

Arun Vijay: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர், தனக்கென வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘மிஷன் சாப்டர் 1’ மாபெரும் ஹிட்டடித்தது.

அதனைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படமும் விரைவில் வெளியாக உள்ளது. தொடர்ந்து, பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மான் கராத்தே படத்தின் இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த படம் அருண் விஜய்யின் 36ஆவது படமாகும். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் புகழ் பாலாஜி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகை சித்தி இத்னானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த படத்தில் இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும், இந்த படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் படம் குறித்து அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் அருண் விஜய்க்கு வில்லனாக பிரபல கன்னட நடிகர் யோகி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் யோகி கூறுகையில், “கன்னடத்தில் வெளியான ஹெட் புஷ் படத்தில் நான் நடித்திருந்தேன்.

அந்த படத்தை பார்த்து தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. நான் கட்டாயம் இந்த படத்தில் நடிப்பேன்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here