‘காந்தாரா-ஏ லெஜண்ட் பாகம் 1’ அப்டேட்..! மங்களூரில் பிரம்மாண்ட செட் அமைக்கும் படக்குழு..!

0
92

கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாக நடித்த படம் ‘காந்தாரா’. இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ‘காந்தாரா’ டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. ‘காந்தாரா’ படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து ‘காந்தாரா 2’ படத்தை இயக்க திட்டமிட்டனர்.

இந்த நிலையில், இப்படத்திற்கு ‘காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1’ என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு சமீபத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மூலம் அறிவித்திருந்தது.

மேலும், ‘காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1’ திரைப்படத்தின் கதை 1970- 80 காலகட்டத்தில் நடைபெறுகிறது. இதனால், அக்காலம் போன்று காட்சிகள் உருவாக்க பிரமாண்ட செட் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, செட் அமைக்கும் பணிகள் மங்களூரில் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதனுக்கு தந்தையாக நடிக்கும் சீமான்..? உற்சாகத்தில் தம்பிகள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here