KARAA: அறிமுக இயக்குநர் அவதார் இயக்கத்தில் நடிகர் மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் படம் ‘கரா’. இந்த படத்தை பவானி என்டர்டெயின்மெண்ட் சார்பில் ராஜேஷ்குமார் தயாரிக்கிறார்.
மேலும், வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். அச்சு ராஜாமணி என்பவர் படத்துக்கு இசையமைக்கிறார். முன்னதாக இந்த ‘கரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
தொடர்ந்து, படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் தற்போது ‘கரா’ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, மகேந்திரனின் இந்த ‘கரா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலை நடிகர் விஜய் சேதுபது பாடியுள்ளார். இந்த பாடல் நாளை வெளியாகவுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சின்ன வயது கதாபாத்திரத்தில் மகேந்திரன் நடித்திருப்பார். அந்த நட்பின் காரணமாக மகேந்திரனுக்காக விஜய் சேதுபதி மகிழ்வோடு சம்மத்திருக்கிறார்.