‘மெய்யழகன்’ அப்டேட்..! தனது போர்ஷனை முடித்த கார்த்தி..!

0
118

‘MeiAzhagan’: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இதுவரை வெளியான திரைப்படங்கள் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போகாத நிலையில் மிகவும் கவணத்துடன் நடித்து வருகிறார்.

தனக்கென ஒரு ஸ்டைலை வைத்திருக்கும் கார்த்திக்கு பின்னல் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரது நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜப்பான்’ தீபாவளிக்கு வெளியானது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரீச் ஆகவில்லை.

இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘கார்த்தி 26’ என்று அழைக்கப்படும் படத்தை நலன் குமாரசாமி இயக்கி வருகிறார். ‘கார்த்தி 27’ என்று அழைக்கப்படும் படத்தை ‘96’ படத்தின் இயக்குநர் பிரேம்குமார் இயக்குகிறார்.

இந்த‘கார்த்தி 27’ படத்திற்கு ‘மெய்யழகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது கார்தி நடிக்கும் பகுதிக்கான படப்பிடிப்பு முடிவடைந்தது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு புகைப்படம் மூலம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினர் ஒன்றிணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம் பகிறப்பட்டது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here