விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி, சிவக்குமார் கண்ணீர் மல்க அஞ்சலி!

0
117

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்ற நடிகர் கார்த்தியும் அவரது தந்தை சிவக்குமாரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மறைவிற்கு பல்வேறு கட்சி தலைவர்களும், நடிகர்கள், ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நேரில் வர முடியாது நடிகர்கள் சிலர் வீடியோ மூலம் தங்களது இரங்காலை தெரிவித்துக்கொண்டனர்.

அந்த வகையில், விஜயகாந்த் மறைவின் போது நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா ஆகியோர் வெளிநாட்டில் இருந்ததால் நேரில் அஞ்சலி செலுத்த செல்லவில்லை. இதனால் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியதும் இன்று (ஜன.04) காலை விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று சிவக்குமார், கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியவில்லை எனக் கூறி கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்து பேசினார் கார்த்தி. அவர் பேசியதாவது, “கேப்டன் நம்மகூட இல்லங்கிறத ஏத்துக்க முடியல. அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு மரியாதை செய்யமுடியாதது எனக்கு வாழ்நாள் முழுக்க ஒரு பிழையாகவே இருக்கும்.

கேப்டன் உடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்ததில்லை. அவர் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த படங்களை தவறாமல் 10 தடவையாவது பார்த்திருப்பேன். நடிகர் சங்கத்தில் நான் வெற்றிப் பெற்ற பிறகு விஜயகாந்த்தை சந்தித்தேன். அவர் அவ்வளவு மகிழ்ச்சியடைந்தார்.

நடிகர் சங்கத்தில் நாங்கள் பெரிய சவால்களை சந்திக்கும்போதெல்லாம் அவரை நினைத்துக்கொள்வோம். ஒரு தலைவன் என்றால் முன் நின்று வழிநடத்த வேண்டும், இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதெல்லாமல் அவரை பார்த்து தான் கற்றுக்கொண்டேன். பெரிய ஆளுமை நம்முடன் இல்லை என்கிறது பெரிய வருத்தமாக உள்ளது.

அவர் எப்போதும் எங்கள் மனதில் இருப்பார். வரும் ஜனவரி 19ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பாக கேப்டன் விஜயகாந்த்திற்கு இரங்கல் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அவருடைய புகழ் எப்போதும் நிலைத்து நிற்கும் வகையில் நாங்கள் செய்ய வேண்டியவைகளை செய்வோம். அவருடைய குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என கண்ணீர் மல்க பேசினார்.

தொடர்ந்து கார்த்தியின் தந்தை சிவக்குமார் பேசுகையில், “எம்ஜிஆரைப் போலவே திரை உலகத்திலும், அரசியலிலும் மக்களுடைய பேராதரவைப் பெற்றவர் அன்பு சகோதரர் விஜயகாந்த். இந்த மண் உள்ள வரை அவரை யாருமே மறக்க முடியாது. வருங்கால முதலமைச்சராக வேண்டியவர் கேப்டன்” என வேதனையுடன் பேசிச்சென்றார்.

இதையும் படிங்க: பிக்பாஸில் கமலுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?.. ஷாக் ஆன ரசிகர்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here