‘என் பையன் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்’ – கார்த்திக் சுப்புராஜ் தந்தை பேச்சு..

0
64

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஒரு நொடி’.  இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ.கருப்பையா, கஜராஜ், தீபா ஷங்கர், ஸ்ரீரஞ்சனி, குரு சூரியா ஆகியோரும் நடித்துள்ளனர்.  சமீபத்தில் இந்த படம் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ் நடிக்கிறார். முன்னதாக தமிழ் சினிமாவில் பட படங்களில் இவர் நடித்திருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அப்பா கஜராஜ், “சிறிய படங்கள் வந்தால்தான் சினிமாதுறை நன்றாக இருக்கும்.

ஒரு பெரிய படத்திற்கு 200 பேர் வேலை செய்கிறார்கள். ஆனால் ஒரு நாளில் 100 சின்ன படங்கள் படப்பிடிப்புகள் நடக்கின்றன. ஒரு படத்திற்கு 50 பேர் வேலை செய்தால்கூட 5ஆயிரம் பேருக்கு வேலை கிடைச்சிருக்கும்.  படங்களையும் 30 நாட்களில் முடித்துவிடலாம். இப்படி இருந்தால் சினிமா துறையில் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலே அனைவரும் யோசிக்கின்றனர். அது மாற வேண்டும். நல்ல கதைக்களம் இருக்கும் சிறிய படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். எனது பையன் பட்ட கஷ்டம் எனக்கு தெரியும். அவனும் சிறிய படங்கள் எடுத்துத்தான் வளர்ந்திருக்கிறான்” என பேசினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here