நட்சத்திரமாக ஜொலிக்க அடுத்த மாதம் வருகிறார் கவின்..

0
112

‘Star’: இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’. இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் ‘ஸ்டார்’ படத்தின் ‘ஸ்டார் இன் தி மேக்கிங்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்ததாக சமீபத்தில் கவின் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து, படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘ஸ்டார்’ திரைப்படம் வருகிற மே 10ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

முன்னதாக ‘ஸ்டார்’ படம் வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ரீலீஸ் தேதி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here