கவின் நடிக்க இருந்த படமா இது..! கடைசியில் கைநழுவ என்ன காரணம்?..

0
95

தனியார் தொலைக்காட்சியில் ‘கனா காணும் காலங்கள்’, ‘சரவணன் மீனாட்சி பகுதி 2’, ‘தாயுமானவன்’ உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் கவின். இவர் ‘நட்புன்னா என்னான்னு தெரியுமா’ என்ற படத்தில் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பிறகு பிக்பாஸ்-ல் கலந்துகொண்ட நிலையில் மக்கள் மனதில் இடம் பித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிப் பிறகு ‘லிப்ட்’ என்ற திரில்லர் திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் மக்கள் அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் நடித்த படம் ‘டாடா’. இந்தப் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு பல இயக்குநர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் கதை கூற ஆரம்பித்தனர். நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிக்க திட்டமிட்ட கவின் அடுத்ததாக ‘ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகினார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், கவின் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், நடிகர் கவின் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படத்தை நழுவவிட்டதாக கூறப்படுகிறது. அந்தப் படன் தான் ‘புளூ ஸ்டார்’. கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வரை வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. படத்தின் கதையை கவின் கேட்டதும் கவினுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம், ஆனால் நடிகர் கவின் மற்ற படங்களில் பிஸியான காரணத்தால் அவரால் ‘புளூ ஸ்டார்’ படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

அதன்பின்னர் கவின் நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் நடிகர் அசோக் செல்வன் கமிட்டாகி நடித்திருக்கிறார். அதேபோல் கவின் தற்போது ஹீரோவாக நடித்து வரும் ‘ஸ்டார்’ படத்தில் முதலில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க இருந்தாராம்.

அவர் விலகிய காரணத்தால் தான் அவருக்கு பதில் தற்போது கவின் நடிக்க ஒப்பந்தமானதாகவும் கூறப்படுகிறது. நடிகர் கவின் ஸ்டார் படத்தை தொடர்ந்து நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதுதவிர நெல்சன் தயாரிப்பில் ஒரு படத்திலும் கவின் நடிக்க கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here