லேடி கெட்டப்பில் லேடி சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய கவின்.. வைரலாகும் ஸ்டார் பாடல்..!

0
121

‘Star’: இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘ஸ்டார்’. இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

சமீபத்தில் ‘ஸ்டார்’ படத்தின் ‘ஸ்டார் இன் தி மேக்கிங்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்ததாக சமீபத்தில் கவின் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்து, படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற மே 10ஆம் தேதி படம் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 20) படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் கல்லூரி விழாவில் நடப்பது போல அமைந்துள்ளது. மேலும், இந்த பாடலில் கவின் லேடி கெட்டப்பில் நடனமாடியுள்ளார்.

யுவன் இசையில் வெளியான இந்த பாடலுக்கும், கவினின் நடனத்திற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது இந்த பாடல் இணையத்தி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here