‘ஆத்தி.. கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா’!.. வடிவேலு பாணியில் படத்தின் அப்டேட் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!..

0
111

Raghuthatha: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ரகு தாத்தா’ படத்தின் பிரோமோ வெளியாகியுள்ள நிலையில் இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ரகு தாத்தா’. இந்தப் படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை ‘ஹோம்பலே’ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படம் குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஒரு போர்டில் ஹிந்தியில் சில வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது அதனை நடிகை கீர்த்தி சுரேஷ் கோபகாம வந்த அழிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது. இந்த வீடியோவின் மூலம் இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் டீச்சராக நடித்திருப்பாரோ என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மேலும், இந்த படத்தின் அறிவிப்பு குறித்து நடிகை கீர்த்து சுரேஷ் தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஆத்தி… கிளம்பிட்டாயா கிளம்பிட்டாயா! உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறது, ரகு தாத்தா. விரைவில் உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ‘ரகு தாத்தா’ படத்தின் பிரோமோ வீடியோவில் ஹிந்தி மொழியை அழிக்கும் காட்சி இடம்பெற்றிருப்பதால் பெரும் சர்ச்சை ஏற்பட வாய்ப்புள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: ராசி பார்த்து சம்பளம் வாங்கும் அஜித்?.. அடுத்த படத்தின் சம்பளம் இத்தனை கோடியா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here