கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம்?.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

0
145

Keerthi Suresh: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘சைரன்’ படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியிருப்பார்.

தனது உடலில் கவனம் செலுத்துவதில் அக்கறை கொண்டவர் கீர்த்தி சுரேஷ். உடல் எடை குறைந்து அழகாக இருந்தால் தான் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஒரு சொல் சினிமாவில் உள்ளது.

அதனை பின் தொடரும் கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டு வருகிறார். ஆனால், அவரது இந்த கட்டுபாடுகள் அனைத்தும் வீனாகும் வகையில் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ஹிந்தியில் அமித் சர்மா இயக்கத்தில் பிரபல கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் வாழ்க்கை வரலாறு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அப்துல் ரஹீம் கதாபாத்திரத்தில் அஜய்தேவ்கான் நடித்துள்ளார்.

அவரது மனைவியாக நடிப்பதற்கு கீர்த்தி சுரேஷை முடிவு செய்துவைத்திருந்தனர். ஆனால், அவர் நாளுக்கு நாள் எடை குறைந்துக்கொண்டே போனதால் அவர் நடிக்க முடியாமல் போனது.

இப்படி தென்னிந்திய சினிமாவில் இருந்து ஹிந்தியில் களம் இறங்க கீர்த்தி சுரேஷ் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கேரளாவைச் சேர்ந்த ஒருவரை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.  இந்நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷுக்கு 30 வயதை எட்டியுள்ள நிலையில் தற்போது திருமணம் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

இது உண்மையா என்பது தெரியவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகததால், இது உண்மையா என்பது தெரியவில்லை. முன்னதாக பல முறை இதுபோல கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்க இருப்பதாக வதந்தி பரவிய நிலையில் இது குறித்த அப்டேட்டை கீர்த்தி சுரேஷ் தான் கூறவேண்டும். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here