‘படம் ரிலீஸான 48 மணிநேரத்திற்கு விமர்சனம் செய்யக் கூடாது’ – கேரள நீதிமன்றம்..!

0
76

மலையாள படமான ‘ராஹேல் மாகன் கோரா’ படத்தின் இயக்குநர் உபைனி கொச்சி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “எங்களது புதிய படங்கள் தியேட்டர்களில் ரிலீஸான சில நிமிடங்களிலேயே வேண்டுமென்று தவறான விமர்சனங்கள் செய்கின்றனர்.

இதனால், எங்களது படங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், ரசிகர்களுக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் குறைகிறது. இதனால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் ஷியாம் பத்மன் என்பவரை நியமித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, சினிமா விமர்சனங்கள் தொடர்பான தனது பரிந்துரைகளை ஷியாம் பத்மன் அறிக்கையாக கேரள நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், “சினிமா படங்களை விமர்சன் செய்பவர்கள், ஒரு படம் ரிலீஸாகி 48 மணி நேரத்துக்கு பின்னரே விமர்சனம் செய்ய வேண்டும்” என பரிந்துரைத்துள்ளார்.

மேலும், “இந்த விவகாரத்தைக் கண்காணிப்பதற்கான பிரத்யேக இணையதளத்தையும் உருவாக்க வேண்டும், திரைப்படத்தை விமர்சனம் செய்பவர்கள் தேவையில்லாத கருத்துக்களை முன்வைக்காமல் மிகவும் ஆக்கபூர்வமான கருத்தை எடுத்துரைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here