‘டாக்ஸிக்’ படத்தில் நடிக்கும் கியாரா அத்வானி..! அப்போ கரீனா கபூர்?..

0
120

Kiara Advani: கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் திரையுலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் யாஷ். கன்னட திரையுலகை மிகப்பெரிய உயரத்துக்குக் கொண்டு சென்ற படம் கேஜிஎப். இந்த படத்தில் இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு பாகங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றன.

மேலும், மூன்றாம் பாகம் வெளிவரும் என இரண்டாம் பாகத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகத்திற்காக ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர். அந்த அளவிற்கு கேஜிஎப் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் யாஷ் தனது 19ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘டாக்ஸிக்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படம் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படத்தில் கரீனா கபூர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கரீனா கபூர் முதல்முறையாக தென்னிந்திய சினிமாவில் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்க இருக்கிறார். முன்னதாக இந்த படத்தில் கரீனா கபூர் நடிப்பதாக தகவல் வெளியானது.

கரீனா கபூர் யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிப்பதாகவும் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here