‘கொஞ்ச நாள் பொறு தலைவா’..! கோயம்புத்தூரில் தேவாவின் இசைக்கச்சேரி..!

0
120

கோயம்புத்தூரில் தேனிசைத் தென்றல் தேவா வரும் ஏப்.13ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் இசைக்கச்சேரி நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு, ‘கொஞ்ச நாள் பொறு தலைவா!’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

தேவா பாடிய கானா பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கானா பாடல் என்றாலே தேவா தான் என கூறப்பட்டு வந்தது. மேலும், இதனை உடைத்து அனைத்து வகை பாடல்களும் எனக்கு தெரியும் என வெளிகாட்டியவர் தேவா.

தேவானின் இசைக்கச்சேரி சமீபத்தில் சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூரில் வருகிற ஏப்.13ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில், திரை இசை பிரபலங்கள் சபேஷ் – முரளி, அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.பி.,சரண், உண்ணி மேனன் மற்றும் விஜய் டி.வி., சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்கள் உட்பட பல பிரபல இசைக் கலைஞர்கள் பங்கேற்ற உள்ளனர்.

இந்த நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சிக்கான போஸ்டரை தேவா வெளியிட்டுள்ளார். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடக்கவுள்ள தேவாவின் இசைக் கச்சேரிக்கு வழக்கம்போல் கோவை மக்கள் தங்களது ஆதரவை அளிப்பார்கள் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here