‘Kottukkaali’: கூழாங்கல் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கொட்டுக்காளி’. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் சூரி, அன்னா பென் நடித்துள்ளனர்.
மேலும், இந்த படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது. அதற்கான தேதியை தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நமது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டுக்காளி’ திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் வருகிற பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி திரையிடப்படவுள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இது குறித்த போஸ்டரையும் தனது ‘X’ தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.