லாரன்ஸ் உதவியோடு சமோசா விற்கும் அக்காவுக்கு ஆட்டோ வழங்கிய பாலா..!

0
129

‘KPY Bala’: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் பாலா. இவர் சமீப காலமாக ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு செய்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து பாலா சொந்த செலவில் மலை கிராம மக்களுக்கு நான்கு இலவச அவசர ஊரதிகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார். மிக்ஜம் புயலால் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு கொடுத்து உதவினார்.

சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கோட்டை கயப்பாக்கம் என்ற கிராமத்தில் 3 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்துள்ளார். சமீபத்தில் சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையை தொடங்கி வைத்துள்ளார்.

சமீபத்தில் பெட்ரோல் பங்கில் பணிபுரியும் இளைஞர் ஒருவருக்கு பைக் வாங்கி கொடுத்தார். இந்த நிலையில், தற்போது மின்சார ரயிலில் சமோசா விற்றுவந்த பெண்ணிற்கு ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார்.

இதுகுறித்த வீடியோவையும் பாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில், “கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வரும் இந்த அக்காவின் பெயர் முருகம்மாள். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

இவர் மின்சார ரயிலில் சமோசா விற்று வருகிறார். இவருக்கு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டவேண்டும் என்பது தான் ஆசை. இவரது ஆசை என்னுடைய ரோல் மாடலான ராகவா லாரன்ஸ் மாஸ்டர் உதவியுடன் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here