‘தனது குழந்தைகளுடன் KPY பாலா’ – வைரலாகும் புகைப்படம்..!

0
105

‘KPY Bala’: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் பாலா. இவர் சமீப காலமாக ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு செய்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து பாலா சொந்த செலவில் மலை கிராம மக்களுக்கு நான்கு இலவச அவசர ஊரதிகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார். மிக்ஜம் புயலால் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு கொடுத்து உதவினார்.

சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கோட்டை கயப்பாக்கம் என்ற கிராமத்தில் 3 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்துள்ளார். சமீபத்தில் சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையை தொடங்கி வைத்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது பாலா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புதிய புகைப்படத்தை பகிர்ந்து ‘எனது குழந்தைகளுடன்’ என குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் இதுவரை பாலா வழங்கிய ஐந்து ஆம்புலன்ஸ்களுடன் ஒன்றாக சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் அமைந்துள்ளது.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தொடர்ந்து, பாலா ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் இலவச ஆம்புலன்ஸ்கள் வழங்கி வருவதற்கு மக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here