‘அவர் எதை செய்தாலும் யோசித்துதான் செய்வார்’ – விஜய் அரசியல் குறித்து பேசிய KPY பாலா..!

0
82

சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையை KPY பாலா தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அவர் பேசியதாவது, “மற்றவர்களுக்கு தொடர்ந்து நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அவசர ஊரதி வாங்கி கொடுத்திருக்கிறேன். நான் 10 அவசர ஊரதிகளை வாங்கி தருவதாக கூறினேன். இதுவரை 5 வாங்கியிருக்கிறேன். மீதம் இருக்கும் ஐந்தையும் விரைவில் வாங்கித் தருவேன்” என்றார்.

தொடர்ந்து விஜய் அரசியல் வருகை குறித்து பேசிய பாலா, “நடிகர் விஜய் எதை செய்தாலும் யோசித்துதான் செய்வார். விஜய் சார் பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதி இல்லை. அரசியலில் சேரும் அளவிற்கு நான் பெரிய ஆளும் கிடையாது. எனக்கு பதவி ஆசை இல்லை. அந்த அளவிற்கு மூளையும் இல்லை.

எனக்கு சேவை மட்டும் போதும். அரசியலில் தாக்கு பிடிக்கும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை. நான் செய்வதில் எந்த விதமான அரசியல் நோக்கமும் கிடையாது, அன்பின் ஏக்கம் மட்டுமே இருக்கிறது” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here