மருத்துவத்திற்கு இலவச ஆட்டோ.. பாலாவின் சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு..!

0
122

KPY Bala: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் பாலா. இவர் சமீப காலமாக ஆதரவற்ற முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு செய்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து பாலா சொந்த செலவில் மலை கிராம மக்களுக்கு நான்கு இலவச அவசர ஊரதிகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார். மிக்ஜம் புயலால் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு கொடுத்து உதவினார்.

சமீபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கோட்டை கயப்பாக்கம் என்ற கிராமத்தில் 3 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்துள்ளார். இந்த நிலையில், தற்போது சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மருத்துவத்திற்காக இலவச ஆட்டோ சேவையை இன்று தொடங்கி வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிம் பேசியதாவது, “மருத்துவத்திற்கு செல்பவர்கள் பேருந்திற்காக காத்திருந்து செல்ல வேண்டி இருக்கிறது. அனைவராலும் அவசரத்திற்கு ஆட்டோவில் செல்ல முடியவில்லை.

அதனால் தான் கர்ப்பிணிகள், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த இலவச ஆட்டோ சேவையை தொடங்கியுள்ளோம். இந்த இலவச ஆட்டோ காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும். அனகாபுதூர், பம்மல், பல்லாவரம் போன்ற இடங்களை சுற்றியுள்ள மக்கள் மருத்துவத்திற்காக இந்த ஆட்டோவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது எந்த அளவிற்கு பயன்படுகிறது என்பதை பார்த்துவிட்டு மற்ற பகுதிகளுக்கு ஆட்டோ வழங்குவேன். இந்த ஆட்டோ ஒட்டுநரின் சம்பளம் மற்றும் பெட்ரோல் என் சொந்த செலவில் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்யும் வரும் பாலாவின் செயலுக்கு ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: கமல்ஹாசனின் ‘KH237’ படத்தை இயக்கும் இரட்டை சகோதரர்கள்..! அதிரடி ஆக்‌ஷன் கன்பார்ம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here