நகைச்சுவை நடிகர் புகழ் மற்றும் KPY குரேஷி ஆகியோர் துபாயில் சமீபத்தில் நடத்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர். அப்போது, கமல்ஹாசனையும், பிக்பாஸ் மாயாவையும் சேர்த்து வைத்து சர்ச்சைக்குரிய வகையில் கலாய்த்து பேசி இருந்தனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனைக் கண்ட கமல்ஹாசன் ரசிகர்கள், இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்தும், கமலை தரைக்குறைவாக பேசிய புகழ் மற்றும் குரேஷி ஆகியோர் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், தற்போது இந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்டு புகழ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கமல் ஹாசன் சார் ரசிகர்களுக்கு வணக்கம். கொஞ்சம் மாதத்திற்கு முன்பு துபாயில் நானும் என் நண்பர் குரேஷியும் கலந்துகொண்டோம்.
அப்போது நகைச்சுவைக்காக நாங்கள் பேசிய சில வார்த்தைகள் கமல் ஹாசன் ரசிகர்களை புண்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது. கமல் ஹாசன் ரசிகர்களுக்கு மனம் புண்பட்டு இருந்தால் நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” எனக் கேட்டுக்கொண்டார்.
அதேபோல், KPY குரேஷியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நானும் புகழும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். அப்போது பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. நாங்கள் வேண்டுமென்று கமல் சாரை தாக்கி பேசவேண்டும் என எண்ணவில்லை.
எங்களை அறியாமல் விவரம் தெரியாமல் இதுபோன்று பேசிவிட்டோம். கமல் மிகப்பெரிய லெஜண்ட் அவர் குறித்து பேசிய தவறு தான். என்னை மன்னித்துவிடுங்கள்” எனப் பேசியுள்ளார். இந்த நிலையில் தற்போது புகழ் மற்றும் குரேஷி ஆகியோர் கமல் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ‘வந்தே மாதரம்’ பாடலை பாடிய வெளிநாட்டு ரசிகை.. ரசித்து வீடியோ எடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்…!