டிரெண்டிங் நம்பர் 1-ல் ‘அன்னபூரணி’..! ஹாப்பியில் நயன்தாரா..!

0
97

Annapoorani: நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அன்னபூரணி’ திரைப்படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு கிடைக்காத நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி டிரெண்டிங் நம்பர் 1 இடத்தில் உள்ளதாக படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது.

நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் ஆகியோரது நடிப்பில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அன்னபூரணி’. இந்தப் படத்தை இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா என்கிற அறிமுக இயக்குநர் இயக்கினார்.

மேலும் இப்படத்தில் சத்யராஜ், பூர்ணிமா, ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படம் தனது 75ஆவது படம் என்பதால் கூடுதல் கவனத்துடன் நடித்த நயன்தாரா, இந்தப் படத்திற்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்ததோடு சமூக வலைத்தளங்களிலும் புரமோஷனும் செய்திருந்தார்.

இருந்தபோதிலும், அன்னபூரணி படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பல இடங்களில் படம் திரைக்கு வரவில்லை. இதனால், அப்செட் ஆன படக்குழு படத்தை வேறுவழியின்றி ஓடிடிக்கு விற்றது. அதன்படி அன்னபூரணி படம் டிசம்பர் 29ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸானது.

இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் அன்றைய தினம் ரிலீஸானது. ஓடிடி ரிலீஸ்க்கு பிறகு இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என படக்குழு எதிர்பார்த்து காத்திருந்தது. அதன்படி, அன்னபூரணி படம் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிரெண்டிங் நம்பர் ஒன்னில் உள்ளது. இது குறித்த அதிகாரத் தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: யூடியூப்பில் 7.6M பார்வையாளர்கள்: மிரட்டாலாக வெளியான ‘ரத்னம்’ முதல் பாடல்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here