‘Lal Salaam’ collection: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார்.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது.
இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.8 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாதாரண வேலை நாளில் இந்த படம் வெளியானதால், வசூல் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் மட்டும் ‘லால் சலாம்’ படம் சுமார் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் வெளிநாட்டு வசூல் தான் முதல் நாளில் பலம் சேர்த்தது. மேலும், வரவிருக்கும் நாட்கள் முக்கியமானதாக இருக்கும், வார இறுதியில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.