‘லால் சலாம்’ ஆடியோ லான்ச்.. ரஜினியின் ஸ்பீச்சுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்..!

0
190

‘Lal Salaam’: நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது.

இந்தப் படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 9ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, ‘லால் சலாம்’ படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், ஆடியோ லான்ச்சில் ரஜினிகாந்த் பேசவுள்ள பேச்சுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகவுள்ள ‘அனிமல்’ படம்: ‘சென்சாரில் நீக்கப்பட்ட காட்சிகள் இடம்பெறும்’ – படக்குழு தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here