‘நம்ம தேர் திருவிழாவுக்கு அலப்பற கெளப்ப நேரம் வந்தாச்சு’ – ‘லால் சலாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

0
197

‘Lal Salaam’: நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார்.

படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது.

பொங்கலுக்கு வெளியாக இருந்த ‘லால் சலாம்’ திரைப்படம் தற்போது பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக இந்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த நிலையில் பல்வேறு காரணங்களுக்காக படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்த நிலையில், அதே லைகா நிறுவனத்தின் தயாரில் அருண் விஜய் நடிக்கும் ‘Mission Chapter 1’ படத்தை பொங்கலுக்கு வெளியிடவுள்ளது.

இதையும் படிங்க: ‘ஏற்றி விடும் ஏணிகளை எட்டி உதைக்கும் வடிவேலு’ – ப்ளூ சட்டை மாறன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here