‘லால் சலாம்’ அப்டேட்டை வெளியிட்ட விஷ்ணு விஷால்..!

0
101

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது.

இந்த நிலையில், தற்போது நடிகர் விஷ்ணு விஷால் ‘லால் சலாம்’ படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘லால் சலாம்’ படத்தில் தனது டப்பின் பணி முடிந்துவிட்டதாகவும், படம் பிரம்மாண்டமாக வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 9ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: பிப்ரவரியில் வெளியாகும் ‘துருவ நட்சத்திரம்’ படம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here