Kapil Dev Birthday: நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
முக்கியமாக ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது.
இந்த நிலையில், கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ் பிறந்த நாளை முன்னிட்டு இன்று லைகா நிறுவனம் சார்பில் ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கபில் தேவ் ஆகியோர் நடந்து வரும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கேப்டன் உருவபடத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்!