‘Lal salaam’ Release: பொங்கல் போட்டியில் இருந்து விலகிய ‘லால் சலாம்’!.. என்ன காரணம்..!

0
99

Lal salaam Release: நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். படத்தில் நடிகர் விக்ராந்த், நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கிரிக்கெட் நட்சத்திரம் கபில் தேவ், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தைத் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறது.

சமீபத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து லால் சலாம் டப்பிங் பணிகளை ரஜினி நிறைவு செய்துள்ளார் என்ற தகவலும் வெளியானது. லால் சலாம் திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், லால் சலாம் படத்துக்கு போட்டியாக மேலும் மூன்று திரைப்படங்கள் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகவுள்ளன. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’, விஜய் சேதுபதி, காத்ரீனா கைஃப் நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’.

இந்த போட்டியில் முன்னதாக ‘அரண்மனை 4’ படமும் இருந்த நிலையில் கிராபிக்ஸ் பணி முடியாததால் பொங்கலுக்கு அப்படம் ரிலீஸ் ஆகவில்லை என அறிவிக்கப்பட்டது. இதனால், பொங்கல் அன்று இந்த நான்கு படங்கள் திரைக்கு வரவிருந்தது.

மேலும், இந்த நான்கு படங்களும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதால் எந்த படத்திற்கு முன்னுரிமை கொடுப்பது என தெரியாமல் தியேட்டர் உரிமையாளர்கள் குழம்பிப் போய் இருந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த போட்டியில் இருந்து விழகுவதாக ‘லால் சலால்’ படக்குழு அறிவித்துள்ளது.

திரையரங்க உரிமையாளர்களின் நலன் மற்றும் வசூல் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தை ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜனவரி 26ஆம் தேதி விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் வரவிருந்து பிறகு தள்ளிப் போன நிலையில் தற்போது அந்த தினத்தில் ‘லால் சலாம்’ வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here