LIC படத்திற்கு LIC நிறுவனம் நோட்டீஸ்..! டைட்டிலை மாற்ற கோரிக்கை!

0
162

‘LIC Movie’: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் படத்திற்கு மத்திய அரசு நிறுவனம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’. இந்த படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

மேலும், எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ஐசி படத்தி செவந் ஸ்கிரீந் ஸ்டுடியோ நிறுவநம் தயாரித்து வருகிறது. மேலும், சயின்ஸ் பிக்‌ஷன் காதல் படமாக தயாராகி வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது மத்திய அரசின் நிதியில் இயங்கி வரும் நிறுவனமான எல்ஐசி – லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், “எல்ஐசி என்ற தலைப்பு தங்களது நிறுவனத்தை பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது. எனவே படத்தலைப்பை ஏழு நாள்களுக்குள் மாற்ற வேண்டும். இதனை செய்யத் தவறும் பட்சத்தில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இதுகுறித்து படக்குழு தரப்பிலிருந்து எந்த பதிலும், விளக்கமும் அளிக்கப்படவில்லை என தெரிகிறது. முன்னதாக இயக்குநர் எஸ்.எஸ்.குமரன், தனது படத்தின் பெயரை விக்னேஷ் சிவன் தனது படத்திற்கு வைத்திருப்பதாக கூறிய நிலையில் தற்போது எல்ஐசி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க: ‘ஹனுமன் பட டிக்கெட்டில் இருந்து ராமர் கோயிலுக்கு ரூ.5 நன்கொடையாக வழங்குவோம்’ – படக்குழு அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here