LIC படத்தின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன?.. வெளியானது புதிய தகவல்..

0
116

LIC: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’. இந்த படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

மேலும், எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ஐசி படத்தி செவந் ஸ்கிரீந் ஸ்டுடியோ நிறுவநம் தயாரித்து வருகிறது. மேலும், சயின்ஸ் பிக்‌ஷன் காதல் படமாக தயாராகி வருகிறது.

முன்னதாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்ததாகவும் ஆனால், பக்வேறு காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனதாக தெரிகிறது. அதன் பின்னரே பிரதீப் ரங்கநாதன் நடிக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here