Lokesh and ShrutiHassan Album: ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் ஒரு புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டது.
அதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் நேருக்கு நேர் பார்க்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும், ‘Inimel Delulu is the New Solulu’ என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கண்ட ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும், இது புதிய படத்திற்கான அப்டேட்டா? அல்லது ஸ்ருதிஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் புதிய பாடலை இயக்க இருக்குவதற்கான அப்டேட்டா? என தெரியாமல் குழம்பியிருந்தனர்.
பின்னர், லோகேஷ் கனகராஜும், ஸ்ருதிஹாசனும் இனைந்து ஆல்பம் பாடல் ஒன்று உருவாக்குவதாகவும் அதற்கான அப்டேட் தான் இந்த புகைப்படம் என்றும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், தற்போது இது குறித்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன் இணைந்து உருவாக்கியுள்ள ஆல்பம் பாடலுக்கு ‘இனிமேல்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த பாடல் வரிகளை கமல்ஹாசன் எழுதியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.