Leo 2: தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநர்களுல் ஒருவர் லோகேஷ் கனகராஜ். ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் லோகேஷ் தற்போது ரஜினியை வைத்து இயக்க இருக்கிறார்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் மாபெறும் வெற்றியடைந்தது. இதனால், ‘லியோ’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.
இந்த நிலையில், ரசிகர்களின் இந்த கேள்விக்கு தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் அங்கிருந்த செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், ‘லியோ’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, “லியோ 2 படத்தின் கதை இருக்கு. விஜய் சார் ஒப்புதல் கொடுத்தால் எப்போ வேண்டுமானாலும் எடுக்கலாம்” என பதிலளித்தார். தொடர்ந்து, ரஜினியை வைத்து எடுக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு மூன்று மாதங்களில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.