குறும்படத்தையும் விட்டுவைக்காத இயக்குநர் – மீண்டும் ‘LCU’-வை கையில் எடுத்த லோகேஷ்..

0
102

Lokesh Kanagaraj (LCU): தமிழ் திரைத்துறையின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர், ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

இதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171ஆவது படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த் நெகட்டிவ் ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி நிறுவனத்தின் முதல் படைப்பாக ‘பைட் கிளப்’ என்ற திரைப்படத்தை வெளியிட்டார். லோகேஷ் கனகராஜ் தனக்கென எல்சியு எனும் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸை உருவாக்கி இருக்கிறார்.

ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்கும் மார்வெல், டிசி போன்ற சினிமாடிக் யூனிவெர்ஸை போன்று லோகேஷ் கனகராஜும் உருவாக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜின் இந்த எல்சியு-வுக்கென ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. முன்னதாக எதார்த்தமாகக் கைதி மற்றும் விக்ரம் படங்கள் மூலமாக இந்த எல்சியு-வை உருவாக்கினார்.

இதற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு அளித்த நிலையில் அடுத்தடுத்து தனது படங்களை எல்சியு-ல் உருவாக்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாகச் சமீபத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படமும் எல்சியு-வை மேலும் விரிவுபடுத்தும் விதமாக அமைந்திருந்தது. தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த்தை வைத்து எடுக்கும் படமும் எல்சியு-க்குள் வருமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜின் எல்சியு எப்படி உருவாகியது என்பது குறித்து ஒரு குறும்படம் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக லேகேஷ் கனகராஜ் தனது எல்சியு uருவானது எப்படி? என்ற ஆவணப்படம் எடுக்கவுள்ளதாகவும் அதனை ‘Netflix’க்கு 3 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், தற்போது அது குறும்படமாக வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here