Inimel Album Update: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடைசியாக விஜய்யை வைத்து இயக்கிய ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் இசையில் கமல்ஹாசனின் பாடல் வரிகளில் ஒரு ஆல்பத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்து வருகிறார். இந்த பாடலுக்கான அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில், இந்த ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் டீசர் நாளை (மார்ச் 21) மாலை 6:30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டரும் வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கேமரா முன்பு வருவதற்கு கூச்சமாக இருப்பதாக கூறிய லோகேஷ் கனகராஜ் தற்போது ஆல்பத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.