Lover OTT: இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கும் படம் ‘லவ்வர்’. இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா நடிக்கிறார்.
மேலும், கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படமானது கல்லூரியில் இருந்து ஆறுவருடங்களாகப் பெண் ஒருவரை காதலித்து வரும் இளைஞருக்கும், அப்பெண்ணிற்கும் இடையில் இருக்கும் உறவுச்சிக்கலை விவரித்துப் பேசுகிறது.
‘லவ்வர்’ திரைப்படம் கடந்த பிப்.9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் வெளியான முதல் நாளில் குறைந்த அளவே திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் பல்வேறு திரையரங்குகளில் கூடுதலாக ரிலீஸ் ஆனது. தொடர்ந்து படத்திற்கு நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில், ‘லவ்வர்’ திரைப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வருகிற மார்ச் 8ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணத்திற்காக ரிலீஸாகவில்லை.
இந்த நிலையில், தற்போது ‘லவ்வர்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வருகிற மார்ச் 27ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.