வெளியானது ‘லவ்வர்’ படத்தின் செகண்ட் சிங்கிள்..!

0
128

‘Lover’ : நடிகர் மணிகண்டன் ஹீரோவாக நடித்த ‘லவ்வர்’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘குட் நைட்’ திரைப்படத்தின் ரசிகர்களை ஈர்த்த நடிகர் மணிகண்டன் தற்போது ‘லவ்வர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா நடிக்கிறார். மேலும், கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படமானது கல்லூரியில் இருந்து ஆறுவருடங்களாகப் பெண் ஒருவரை காதலித்து வரும் இளைஞருக்கும், அப்பெண்ணிற்கும் இடையில் இருக்கும் உறவுச்சிக்கலை விவரித்துப் பேசுகிறது.

இந்த படப்பிடிப்பின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த ‘லவ்வர்’ படம் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் தற்போது ‘லவ்வர்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘தேன் சுடரே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான ‘விலகாத’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: கனமழை பாதிப்பு: மக்களுக்கு உதவிய பாலா, நிஷாவுக்கு சீமான் பாராட்டு..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here