நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘லவ்வர்’ டிரைலர்.. ரசிகர்கள் வரவேற்பு..!

0
62

‘Lover Trailer’: இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கும் படம் ‘லவ்வர்’. இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா நடிக்கிறார். மேலும், கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படமானது கல்லூரியில் இருந்து ஆறுவருடங்களாகப் பெண் ஒருவரை காதலித்து வரும் இளைஞருக்கும், அப்பெண்ணிற்கும் இடையில் இருக்கும் உறவுச்சிக்கலை விவரித்துப் பேசுகிறது.

சமீபத்தில் ‘லவ்வர்’ படத்தின் ‘வாடி என் ட்ரிப்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ‘உயிர் வாசமே’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும், இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ்குமார் பாடிய நிலையில் அந்த காந்த குரல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தொடர்ந்து, ‘லவ்வர்’ படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது ‘லவ்வர்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இளைஞர்களை கவரும் வகையில் அமைந்திருக்கும் இந்த டிரைலருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். ‘லவ்வர்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 9ஆம் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here