காதல் எமோஷனலான பாடல் ‘உசுர உருவி’.. கொண்டாடும் ரசிகர்கள்..!

0
106

‘Usura Uruvi’: இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கும் படம் ‘லவ்வர்’. இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா நடிக்கிறார். மேலும், கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படமானது கல்லூரியில் இருந்து ஆறுவருடங்களாகப் பெண் ஒருவரை காதலித்து வரும் இளைஞருக்கும், அப்பெண்ணிற்கும் இடையில் இருக்கும் உறவுச்சிக்கலை விவரித்துப் பேசுகிறது.

சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. ‘லவ்வர்’ திரைப்படம் வருகிற 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ‘லவ்வர்’ படத்தின் புதிய பாடலான ‘உசுர உருவி’ என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. காதல் எமோஷனலான இந்த பாடல் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

முன்னதாக இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ‘உசுர உருவி’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here