டிரெண்டிங்கில் ‘லவ்வர்’ படத்தின் புதிய பாடல்..! ரசிகர்கள் வரவேற்பு..!

0
115

‘Vaadi En Trip Video Song’: அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கும் படம் ‘லவ்வர்’. இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீகவுரி பிரியா நடிக்கிறார். மேலும், கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படமானது கல்லூரியில் இருந்து ஆறுவருடங்களாகப் பெண் ஒருவரை காதலித்து வரும் இளைஞருக்கும், அப்பெண்ணிற்கும் இடையில் இருக்கும் உறவுச்சிக்கலை விவரித்துப் பேசுகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘லவ்வர்’ படத்தின் ‘வாடி என் ட்ரிப்’ என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படம் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது பிப்ரவரி 9ஆம் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here