‘2024ஆம் ஆண்டின் பிளாக்பஸ்டர் படமாக ‘லவ்வர்’ இருக்கும்’ – விநியோகஸ்தர் சக்திவேலன்!

0
87

‘Lover’: தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் சில முக்கியமான வெற்றிப் படங்களை விநியோகம் செய்தவர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன். இந்த நிறுவனமானது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சிறிய படங்களையும் விநியோகம் செய்து வெற்றி பெற வைத்துள்ளது.

அந்த வகையில், ‘குட்நைட்’ படத்தையும் இந்த நிறுவனம் விநியோகம் செய்த நிலையில் விமர்சன ரீதியாகவும், வரவேற்பையும் பெற்றது. இந்த படத்தைத் தயாரித்த நிறுவனம் தான் தற்போது ‘லவ்வர்’ படத்தைத் தயாரித்துள்ளது. இந்த படத்திலும் ‘குட்நைட்’ படத்தில் நடித்த மணிகண்டன் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ‘லவ்வர்’ படத்தைப் பார்த்த சக்திவேலன் இந்த படம் குறித்து கூறியதாவது, “கடந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படமான ‘குட்நைட்’ படத்தைத் தயாரித்தவர்களின் ‘லவ்வர்’ படத்தைப் பார்த்தேன். சமகாலத்திய அற்புதமான காதல் திரைப்படமாக அமைந்துள்ளது.

இந்தப் படத்தில் உள்ள காட்சிகள் இன்றைய இளம் தலைமுறையினரைத் தொடர்புபடுத்தி, அவர்களை திரையரங்குகளுக்கு வரவழைக்கும். மணிகண்டனின் அற்புதமான நடிப்பு ஒவ்வொரு காட்சியிலும், அவரது ஏற்ற இறக்கமான குரல் படத்தை இன்னும் தூக்கி நிப்பாட்டியுள்ளது.

ஷான்ரோல்டனின் இசை உணர்வுபூர்வமாக உள்ளது. எனது வார்த்தையை குறித்துக் கொள்ளுங்கள். 2024ஆம் ஆண்டின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக ‘லவ்வர்’ கண்டிப்பாக இருக்கும்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here