மோகன்லால் படத்திற்கு இசையமைக்கும் லிடியன் நாதஸ்வரம்..! வைரலாகும் வீடியோ..!

0
146

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திரையுலகை கலக்கி வரும் மோகன்லால் இயக்குநராக களமிறங்குகிறார். இதுகுறித்த அறிவிப்பை கடந்த மாதம் புத்தாண்டு அன்று தனது ‘X’ தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த படத்திற்கு ‘பாரோஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை 3D தொழில்நுட்பத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் லிஜொ புன்னோஸ் எழுதிய ‘பரோஸ்: கார்டியன் ஆப் தி காமா’ஸ் டிரெசர்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட இருக்கிறது.

இந்த படம் குறித்த அறிவிப்பு கடந்த 2019ஆம் ஆண்டே வெளியான நிலையில் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது. தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கொச்சி, கோவா உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் ‘லிடியன் நாதஸ்வரம்’ இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்திற்காக லிடியன் இசையமைத்த முதல் டியூன் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here