விமலுக்கு வந்த அடுத்த சோதனை.. மா.பொ.சி பேத்தி ஆவேசம்.. குழப்பத்தில் படக்குழு..!

0
79

MA.PO.SI: நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் புதிய படத்தை இயக்குகிறார். அந்த படத்திற்கு ‘மா.பொ.சி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் கன்னி மாடம் படத்தில் நடித்த ஸ்ரீ ராம் கார்த்திக், சாயா தேவி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சித்து குமார் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். இந்தப் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்தப் படத்தை வெற்றிமாறனுடைய கிராஸ் ரூட் பிலிம் நிறுவனம் வெளியிடுவதாக கடந்த 1ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இப்போஸ்டரை சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், சமுத்திரக்னி, லால் உள்ளிட்டோர் அவரக்ளது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். வாத்தியார் கெட்டப்பில் விமல் நடித்துள்ளார்.

பள்ளிக்கூடத்தில் கல்வியை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இந்த போஸ்டரில் விமல் முகத்தில் ரத்தக் கறை, கையில் சாட்பீஸுடன் உள்ளார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் டைட்டிலை எதிர்த்து மா.பொ.சி.யின் பேத்தி பரமேஸ்வரி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமீபத்தில் மா.பொ.சி படத்தின் போஸ்டரைப் பார்த்தேன். எனது தாத்தாவின் பெயரை பயன்படுத்துவதற்கு குடும்பத்தாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என தெரியாதா?

மா.பொ.சி என்றால் ‘மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ என கூறுகின்றனர். அப்படி பார்த்தாலும் எனது தாத்தாவின் பெயர் தான் வருகிறது. நாளையே நாங்கள் தாத்தாவுடைய பயோபிக்கை எடுத்தால் என்ன தலைப்பு வைக்கிறது? அதனால் தான், இந்தத் தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here