‘Maayavalai First Single’ : ‘மாயவலை’ ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிடும் சிம்பு..! படக்குழு அறிவிப்பு..!

0
97

Maayavalai: இயக்குநர் ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அமீர், சத்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் மெளனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற தரமான திரைப்படங்களைக் கொடுத்தவர் அமீர். இயக்குநராக இருந்த இவர் தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். வடசென்னை படத்தில் ராஜன் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்த அந்த கதாபாத்திரம் தனுஷுக்கு நிகராக பேசப்பட்டது.

தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது அமீர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாயவலை’. திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அமீருடன் சஞ்சிதா ஷெட்டி, நடிகர் ஆர்யாவின் தம்பி சத்யா ஆகியோர் நடித்துள்ளனர்.

மாயவலை திரைப்படத்தை அமீர் தான் தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து உள்ளார். இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் கம்பெனி நிறுவனம் தான் வெளியிடுகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான ‘வாழ்க்கை ஒரு மாயவலை’ என்ற பாடலை இன்று (டிச.25) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடலை சிம்பு வெளியிடவுள்ளதாகவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி தற்போது அமீர் நடிகரான மாறியிருக்கிறார். இந்நிலையில், அமீர் மீண்டும் இயக்குநராக உருமாறி ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ பர்ஸ்ட் லுக் வெளியீடு!.. இந்த டைட்டிலுக்கும் பிரச்சினையா?..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here