‘Madraskaran’: இயக்குநர் வாலி மோகன்தாஸ் இயக்கத்தில் மலையாள நடிகர் ஷேன் நிகாம் நடிக்கும் படம் ‘மெட்ராஸ்காரன்’. இந்த படத்தின் மூலம் ஷேன் நிகாம் தமிழ் சினிமாவில் கால்தடம் பதிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் கலையரசன், ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
மேலும், இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பும் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குநர் வாலிமோகன்தாஸ் கூறுகையில், “தயாரிப்பாளருக்கு என் முதல் நன்றி.
எனது முதல் படமான ரங்கோலி படம் பார்த்துவிட்டுக் கூப்பிட்டார். கதை கூறிய 5 நிமிடத்தில் இந்தப் படம் இயக்க ஒப்புக் கொண்டார். ஷேன் நிகாமை சந்தித்ததே மறக்க முடியாத அனுபவம், அவர் தமிழில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
ஐஸ்வர்யா தத்தாவால்தான் இந்தப் படம் ஆரம்பித்தது அவருக்கும் எனது நன்றி. நிஹாரிகாவுக்கு இந்த படத்தில் நல்ல கதாப்பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்பு சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.