மகேஷ் பாபுவுக்கு கை கொடுக்கும் ராஜமவுலி.. அடுத்த படம் அமோக வெற்றி தான்.. ரசிகர்கள் கொண்டாட்டம்..

0
107

Mahesh Babu: இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர் ராஜமவுலி. இவர் பல படங்களில் இயக்கி இருந்தாலும் பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் மூலம் உலக அளவில் பிரபலமானார். சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படம் ஜப்பானில் திரையிடப்பட்டது. அங்கும் ராஜமவுலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், தற்போது இயக்குநர் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படம் மகேஷ் பாபுவின் 29ஆம் படமாகும். சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

தற்போது இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சமீபத்தில் மகேஷ் பாபுவும் ராஜமவுலியும் துபாயில் இருந்து ஹைதராபாத் திரும்பிய புகைப்படங்கள் வெளியானது. அதில் மகேஷ் பாபு நீண்ட முடி வைத்திருந்தார். தற்போது வெளியான இந்த செய்தியால் ரசிகர்கள் கன்பார்ம் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here